எஸ்.ஐ பதவிக்கு இன்றும், நாளையும் எழுத்து தேர்வு!

police

தமிழகத்தில் உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மொத்தம் 197 மையங்களில் 43 மாற்றுப்பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,21,213 பேர் இத்தேர்வினை எழுத உள்ளனர். சென்னையில் 10 இடங்களில் நடக்கும் தேர்வினை 506 பெண்கள் உட்பட 8,586 பேர் எழுத உள்ளனர். 20 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு என்பதன் அடிப்படையில் காவல்துறையில் பணியாற்றும் 13,374 பேரும் இந்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை எழுத உள்ளனர்.

examination police
இதையும் படியுங்கள்
Subscribe