திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (65) நேற்று (09.10.2021) சென்னையில் காலமானார். தமிழ் திரையுலகில் 400க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 1,400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பிறைசூடன். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த இவர், அவருடைய சினிமா பயணத்திற்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
எந்தவித உடல்நலக் குறைபாடும் இல்லாத நிலையில், நேற்று மாலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த கவிஞர் பிறைசூடன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு, அவரது குடும்பத்தினருக்கு 25 ஆயிரத்துக்கு காசோலையை அவரது மனைவியிடம் வழங்கினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/piraisoodan-10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/piraisoodan-11.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/piraisoodan-8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/piraisoodan-9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/piraisoodan-6_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/piraisoodan-7.jpg)