
புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் பல்வேறு வகைகளிலும் ஆளுமைகள் நிறைந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியல் அறிஞர்கள் பங்கேற்று உரைநிகழ்த்த உள்ளனர். திங்கள்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது வரவேற்புக்குழுத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தெரிவித்திருப்பது:
கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக்கியதில் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்களின் பங்களிப்பு மிகச்சிறப்பான முறையில் இருந்தது. இதன் வாயிலாக புத்தகத் திருவிழா குறித்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. மூன்றாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நவம்பர் 24 முதல் டிசம்பர் 3-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதலாமாண்டு 25 புத்தக அரங்குகளுடன் ரூ.50 லட்சத்திற்கும், இரண்டாம் ஆண்டு 36 அரங்குகளுடன் ரூ.80 லட்சத்திற்கும் புத்தக விற்பனை நடைபெற்றது. தற்பொழுது நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் 50 அரங்குகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமாக புத்தக விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
டிசம்பர் 24 அன்று காலையில் தொடங்கும் புத்தகத் திருவிழாவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். இதில் மாவட்ட ஆட்சியர் சு.கணே~; உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து 10 நாட்களும் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்கள் எஸ்.ராமகிரு~;ணன், நாஞ்சில்நாடன், சு.வெங்கடேசன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம், கவிஞர்கள் அறிவுமதி, சல்மா, மு.முருகே~;, ஊடகவியலாளர் கார்த்திகைச் செயல்வன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
காலையில் மாணவர்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர்கள், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களை அழைத்துவருவதற்கு சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று 2 லட்சம் மாணவர்களின் புத்தக வாசிப்பு
புத்தகத் திருவிழாவை பள்ளி மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் (30.10.2018) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1999 பள்ளிகளிலும் மூன்றாம் பாடவேளையில் அனைத்து மாணவர்களும் பள்ளி நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வாசிக்க உள்ளனர். ‘புதுகை வாசிக்கிறது’ என்ற இந்த இயக்கத்தில் 2 லட்சத்துக்கும் அதிமான மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க உள்ளனர். புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வாசிப்பு இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜா மற்றும் புத்தகத்திருவிழா பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.
வரவேற்புக்குழு செயலாளர் அ.மணவாளன், பொருளாளர் எம்.வீரமுத்து, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருச்ணன், கவிஞர் நா.முத்துநிலவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)