Writer Vishnupuram Saravanan awarded Bala Sahitya Puraskar

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய பால புரஸ்கார் விருது மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் விருது எனச் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் இலக்கியத்துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன்படி தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான (2025) சாகித்ய பால புரஸ்கார் விருதுகள் மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழ் மொழியில் வெளியான, ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் லட்சுமிகர் என்ற எழுத்தாளருக்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கூத்தொன்று கூடிற்று’ என்ற சிறுகதைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.