எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கி.ரா. மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின்ஆகச்சிறந்த கதை சொல்லியான கி.ரா.வை இழந்து நிற்கிறோம். தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள், யார் ஆறுதல் சொல்வார்? கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின்இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கும்" என்று அறிவித்துள்ளார்.
கி.ரா.வுக்கு தமிழக அரசு மரியாதை வழங்க அவரது மகன் பிரபாகரன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது அறிவித்துளளார்.