Advertisment

எழுத்தாளர் இளங்குமரனார் மரணம்... 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்! (படங்கள்)

Advertisment

தமிழ் மொழிப் பற்றுடன் பல நூல்களை எழுதி தமிழ்ப்பணி ஆற்றிய மொழியறிஞர், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (26.07.2021) இரவு மதுரை திருநகரில் காலமானார். அவருக்கு வயது 91. பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு வகைகளில் தமிழ்ப் பணியைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளரும்ஓவியருமான இளங்குமரனாரை அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரது திருநகர் இல்லத்தில் தமிழறிஞர் இளங்குமரனார் உடலுக்கு காவல்துறை மரியாதை செய்து, உடல் விளாச்சேரி சாலை திருநகர் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க காவல்துறையினர் எஸ்.ஐ. பழனிராஜகுமார் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் நடைபெற்றது.

passes away writter madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe