style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான க.ப.அறவாணன் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். தமிழ் எழுத்தாளரான இவர் தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் மொழி, இலக்கணம், வரலாறு உள்ளிட்ட துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் மறைவு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் பதிவில்,
கல்வித்துறையில் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவரும், தமிழறிஞருமான திரு க.ப.அறவாணன் அவர்கள் மறைவெய்தியது வேதனையளிக்கிறது.
திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்ட அவரை இழந்து வாடும் தமிழ் இலக்கிய உலக நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்! எனக்கூறியுள்ளார்.