worth Rs. 5 crore seized at Chennai airport

Advertisment

சென்னையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று (30.05.2025) 5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானம் மூலம் கஞ்சாவைக் கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று (29.05.2025) ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 971 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சாவைக் கடத்தி வந்தவர் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரு தினங்களில் ரூ. 6 கோடி மதிப்பிலான சுமார் 6 கிலோ உயர்ரக கஞ்சா போதைப் பொருள் மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.