சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்தநிலையில்இன்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைகிளம்பி உள்ளார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தை தொடங்கியஅவர் தமிழக எல்லை வந்தடைந்தார். சசிகலா வருகையையொட்டிதமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்பு பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,சென்னை வரும் பயணத்தின்போது சசிகலாஓசூர்நகரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில்சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்பொழுது சசிகலா அதிமுகதுண்டு அணிந்திருந்தார். சசிகலா அதிமுககொடியைபயன்படுத்துவதற்கு அதிமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் அதிமுக துண்டு அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.