Skip to main content

அதிக போதைக்காக மதுவில் தின்னரை கலந்து குடித்ததால் தொழிலாளிகளுக்கு நேர்ந்த விபரீதம்! 

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

 

Worse for workers as a result of drinking too much alcohol and tinner!

 

மேட்டூர் அருகே, அதிக போதைக்காக மதுபானத்தில் பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் தின்னரை கலந்து குடித்த கூலித்தொழிலாளிகள் இருவரும் உயிரிழந்தனர். 

 

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள சின்ன தண்டாவைச் சேர்ந்தவர் மாதப்பன் (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய உறவினரான கர்நாடகாவைச் சேர்ந்த பேரன் (வயது 60) என்பவர், டிச. 21- ஆம் தேதி மாதப்பன் வீட்டிற்கு வந்திருந்தார். அன்று இரவு இருவரும் மது குடித்துள்ளனர். 

 

ஒரு மதுபான பாட்டிலை வாங்கி வந்த அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு புதர் பகுதிக்குச் சென்றனர். ஒரு குவார்ட்டர் மதுவை இரண்டு பேர் பகிர்ந்து குடித்தால் போதை ஏறாது எனக்கருதிய அவர்கள், வீட்டில் பெயிண்டில் கலப்பதற்காக வாங்கி வைத்திருந்த தின்னரை மதுவில் கலந்து குடித்துள்ளனர். 

 

சிறிது நேரத்தில் அவர்களுக்கு தாகம் எடுத்துள்ளது. அதனால் அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கேயே அவர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளனர். புதர் பகுதிக்குச் சென்றதால் அவர்களை பலரும் கவனிக்கவில்லை. மறுநாள் காலையில்தான் அவர்கள் இருவரும் சடலமாகக் கிடப்பது உறவினர்களுக்கு தெரிய வந்தது. சடலங்களின் அருகில் மது பாட்டிலும், தின்னர் பாட்டிலும், பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடந்தன. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல்நிலைய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இருவரும் அதிக போதைக்கு ஆசைப்பட்டு மதுவில் தின்னரை கலந்து குடித்ததால் அவர்கள் இறந்திருப்பது தெரிய வந்தது. சடலங்களை உடற்கூராய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கொளத்தூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

‘கறி விருந்து... மது போதை...’ - தூக்கத்தில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

man passed away while sleeping in Madurai

 

மதுரை – வீரபாண்டிய நகர் – கருப்பாயூரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்  வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் சமயமுத்து (வயது 33), தன் மனைவியின் ஊரான திருச்சுழி வட்டம் – நெடுகனேந்தல்  கிராமத்துக்கு, மாமனார் கருப்பையா கட்டிய புது வீடு பால் காய்ச்சும்  நிகழ்ச்சிக்கு சென்றார். அன்றைய தினம் அங்கு தங்கிய சமயமுத்து, மறுநாள்  நடந்த கறி விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டிருக்கிறார். 

 

அன்றிரவு மது போதையில் படுத்து உறங்கியவருக்கு, அதிகாலை 1-50 மணிக்கெல்லாம் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதித்த பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் சமயமுத்துவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், சமயமுத்து இறந்துவிட்டதை உறுதி செய்திருக்கிறார். சமயமுத்து இறப்பு குறித்து தந்தை தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் திருச்சுழி காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.