
சேலத்தில் பிரபல பிரியாணி கடையில் வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்ததாகப் பொய் கூறி கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலத்தில் இயங்கி வரும் பிரபல பிரியாணி கடையில் வாடிக்கையாளர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்ததாகப் புகார் கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடைக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடையின் உரிமையாளர் ஆதன்பாஷா, கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் சாம்பாரில் புழு இருப்பதாகப் பொய் கூறி தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், பாஸ்கரன், கோபிநாத், சதீஸ்குமார், கணேசன், பிரபு ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)