Advertisment

உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்... பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது...

உலகிலேயே மிகவும் உயரமான சிவலிங்கம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

Advertisment

worlds tallest shiva lingam

தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள செங்கல் பகுதியில் அமைந்துள்ள மகேஸ்வரம் சிவபார்வதி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவலிங்கம் 111.2 அடி உயரம் கொண்டது. 2012-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில் 8 தளங்கள் அமைக்கப்பட்டு, உள்பகுதி நடைபாதை ஓரங்களில் பல்வேறு சித்தர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக உயரமுள்ள சிவலிங்கம் என ‘இந்திய புக் ஆப் ரெக்கார்டு’ மற்றும் ‘ஆசிய புக் ஆப் ரெக்கார்டு’ ஆகிய சாதனை புத்தகங்களில் இந்த லிங்கம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kerala Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe