Skip to main content

இதனால் உலகின் ஏழாவது இடத்திற்கு முன்னேறும் பி.வி.ஆர். சினிமாஸ்

Published on 13/08/2018 | Edited on 14/08/2018

எஸ்பிஐ என்னும் சத்தியம் சினிமாஸின் 71.7% பங்குகளை  பி.வி.ஆர். சினிமாஸ் தன்வசமாக்கப் போகிறது. சத்தியம் சினிமாஸ் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என மொத்தம் 76 திரைகளுடன் 10 நகரங்களில் இருக்கிறது. தமிழகத்தில் சத்தியம், எஸ்கேப், எஸ்2 ஆகிய பெயர்களுடன் சத்தியம் சினிமாஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

இதன் 71.7% பங்குகளை அதாவது 2,22,711 பங்குகளை 6.33 கோடி ரூபாய்க்கும்,  இதை தவிர 1.6 மில்லியன் பங்குகளை தலா ஒரு பங்கு 1,371.2 ரூபாயென, 2.1 மில்லியன் ரூபாய் கொடுத்ததும் வாங்கியுள்ளனர். சத்யம் சினிமாஸை மொத்தம் 850 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளதாக பி.வி.ஆர். சினிமாஸ் தெரிவித்துள்ளது.

 

sathyam

 

இதுகுறித்து பி.வி.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜிலி  "2020க்குள் 1,000 திரை என்னும் இலக்கை  நோக்கி நகர்வதற்கான வேலைகளில் இதுவும் ஒன்று" என்று தெரிவித்தார். 

 

இன்னும் 30 நாட்களில் பணப்  பரிவர்த்தணைகளும், 9 முதல் 12 மாதங்களில் இணைப்பு நடவடிக்கைகளும் முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த இணைப்பின் மூலம் பி.வி.ஆர். 60 நகரங்களில், 706 திரைகளுடன் உலக அளவில் 7ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர் ரவீந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

nn

 

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றியதாகத் திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது. 16 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் சின்னத்திரை நடிகையும் தயாரிப்பாளர் ரவீந்தரின் மனைவியுமான மகாலட்சுமி தன் கணவருக்கு ஜாமீன் வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ரவீந்தர் சார்பாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஒன்று அவருக்கு ஜாமீன் கேட்டு, மற்றொன்று சிறையில் முதல் வகுப்பு அறை (விஐபிக்களுக்கு கொடுக்கப்படும் ஏ கிளாஸ்) வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில், தற்போது எழும்பூர் நீதிமன்ற மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ரேவதி, இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கில் அவரை விடுவித்தால் சாட்சிகளை அவர் அழிக்கக்கூடும் என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை  வாதங்களை முன்வைத்ததன் அடிப்படையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

 

 

Next Story

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம்

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Actor Vimal fined Rs 300 in check fraud case

 

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

நடிகர் விமல் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு 'மன்னர் வகையறா' என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பிற்கு நடிகர் விமல் கோபி என்பவரிடம் 4.50 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். வாங்கிய 4.50 கோடி ரூபாய் கடனுக்கு விமல் தரப்பு கொடுத்த காசோலை திரும்பி வந்த நிலையில், தயாரிப்பாளர் கோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்திருந்தார். 

 

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே ஆஜராகி இருந்தார். சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் யாரும் முன் வரவில்லை. இறுதியில் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று நடிகர் விமல் தரப்பு மனு செய்தது. அந்த மனு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ததை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தொடங்கினார். வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விமல் செயல்பட்டதாக 300 ரூபாய் அபராதம்  விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.