Published on 14/05/2022 | Edited on 14/05/2022

உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், ''டென்னிஸ் வீரர்கள் மற்றும் அதுசார்ந்த ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, WTA எனப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதிமுதல் அக்டோபர் 2 ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜூலை 28 முதல் அக்டோபர் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.