Skip to main content

உலக பெண்கள் தினம் வருவதை முன்னிட்டு பேரணி! (படங்கள்) 

Published on 01/03/2020 | Edited on 02/03/2020

 

உலக பெண்கள் தினம் வருவதை முன்னிட்டு பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான பேரணியை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த பேரணி பெண்கள் பலர்திரளாக கலந்துகொண்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தொல்லியல் துறை கொடுத்த ஒரு நாள் சர்ப்ரைஸ்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Women's Day Celebration; Notification issued by Department of Archaeology

இன்று (08.03.2024) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்களில் இன்று இலவச அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை பார்வையிடப் பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலில் இன்று ஒருநாள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் சித்தன்னவாசலில் எந்தவித கட்டணமும் இன்றி இன்று சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலியான சோகம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
US Kansas City Super Bowl parade incident

அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் சீஃப்ஸ் சூப்பர் பவுல் என்னும் ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக லட்சக்கணக்கான ரக்பி ரசிகர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்த பேரணியில் கலந்து கொண்ட ரக்பி ரசிகர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென சூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில்  3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரக்பி விளையாட்டு போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அமெரிக்காவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.