Advertisment

மகளிர் தின ஸ்பெஷல்; கோலப்போட்டியில் பங்கேற்ற வழக்கறிஞர்கள்!

WORLD WOMENS DAY LAWYERS COMPETITION

Advertisment

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், விருத்தாசலநீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா, கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை முன்னிலையில் நடைபெற்ற போட்டியில், 'பெண் முன்னேற்றம்' என்ற தலைப்பில், பெண் வழக்கறிஞர்கள் மாக்கோலம், ரங்கோலி ஆகிய கோலங்களைவண்ணப் பொடிகள் பயன்படுத்திப் போட்டிருந்தனர். 'பெண்கள் நாட்டின் கண்கள்', 'பெண்ணுரிமை', 'பெண் காவல் தெய்வம்', 'தாய்' எனப் பல்வேறு வகையில் போடப்பட்ட கோலங்களை ஆய்வு செய்து, சிறப்பாகக் கோலமிட்ட வழக்கறிஞர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைபெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கணபதி, தங்க.செல்வி, ஜெயஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பெண் வழக்கறிஞர்களைப் பாராட்டிப் பேசினர்.

Celebration competition lawyers World Women's Day
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe