Skip to main content

மகளிர் தின ஸ்பெஷல்; கோலப்போட்டியில் பங்கேற்ற வழக்கறிஞர்கள்!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

WORLD WOMENS DAY LAWYERS COMPETITION


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், விருத்தாசல நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா, கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை முன்னிலையில் நடைபெற்ற போட்டியில், 'பெண் முன்னேற்றம்' என்ற தலைப்பில், பெண் வழக்கறிஞர்கள் மாக்கோலம், ரங்கோலி ஆகிய கோலங்களை வண்ணப் பொடிகள் பயன்படுத்திப் போட்டிருந்தனர். 'பெண்கள் நாட்டின் கண்கள்', 'பெண்ணுரிமை', 'பெண் காவல் தெய்வம்', 'தாய்' எனப் பல்வேறு வகையில் போடப்பட்ட கோலங்களை ஆய்வு செய்து, சிறப்பாகக் கோலமிட்ட வழக்கறிஞர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கணபதி, தங்க.செல்வி, ஜெயஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பெண் வழக்கறிஞர்களைப் பாராட்டிப் பேசினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக மகளிர் தினம்; மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
International Women's Day; Metro Rail Corporation is a new initiative

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பிரத்யேக மகளிர் உதவி எண் 155370ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

மகளிர் உதவி எண் 155370 என்பது 24 மணி நேரமும் (24/7) பெண்களால் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது. இதில் அவசரகால பதில் தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் பி.எஸ்.என்.எல். (BSNL) நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து பெண் பயணிகளும் மகளிர் உதவி எண் 155370ஐ தங்கள் தொலைபேசியில் சேமித்து, சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது தேவை ஏற்பட்டால் தயங்காமல் அதைப் பயன்படுத்துமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மகளிர் தின பரிசு; மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Women's Day Gift; Announcement made by Modi

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணத்திற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.