வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று (03.10.2021) திருச்சியில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இந்த சைக்கிள் பேரணியைத் தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி, மத்திய பேருந்து நிலையம், தபால் நிலையம், பிஷப் ஹீபர் கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து சேர்ந்தது. அதேபோல், வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மிக ஆர்வமுடன் வந்து கண்காட்சியில் கலந்துகொண்டனர்.