Advertisment

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் 'இந்தி' எதிர்ப்பு!

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

tweet

மும்மொழி கல்வி கொள்கையானது, தாய் மொழியுடன் இணைப்பு மொழியான ஆங்கிலம் அவற்றுடன் வேறொரு மொழியான இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழி தேர்வு மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக எதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலத்தில் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டணத்தை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முற்பட்டால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசியல் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலகளவில் தமிழ்நாடு இந்தி எதிர்ப்பு என்ற வாசகத்தில் ட்விட்டரில் 'இந்தி எதிர்ப்பு' ட்ரெண்ட் ஆகி வருகிறது.

hindi India Twitter trends
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe