Skip to main content

மாற்றத்திற்கான வாழ்வியல் கல்வி குறித்த பயிற்சி; ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

world vision india summer camp for child at trichy 

 

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரத்தில் வேர்ல்ட் விஷன் இந்தியா சார்பில் குழந்தைகளுக்கு மாற்றத்திற்கான வாழ்வியல் கல்வி குறித்த பயிற்சி தொடக்க விழா அயன்பொருவாய் கிராமத்தில் இன்று (10.05.23) நடைபெற்றது.

 

வேர்ல்ட் விஷன் இந்தியா மேலாளர் செல்வின் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் குழந்தைகளுக்கான நான்கு வகையான உரிமைகள், குழந்தைகள் மீதான வன்முறைகள், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள், மாற்றுக் குடும்ப முறை பராமரிப்பு திட்டம் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் குழந்தைகளின் பங்கு குறித்தும் குழந்தைகளுக்கான வாழ்வியல் கல்வி பயிற்சி கையேடுகளை வெளியிட மான்போர்ட் சமூக செயல் மையம் இயக்குநர் பிலிப்புராஜ் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்.

 

தீட்சா நிறுவன இயக்குநர் ஐசக், கல்வியின் அவசியம், குழந்தைகள் நலனில் சமுதாயத்தின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினர். தீட்சா நிறுவன  திட்ட அலுவலர் இசபெல்லா வாழ்த்துரை வழங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டென்னிஸ் ராஜ் வரவேற்றார். ஜேம்ஸ் மணி நன்றி கூறினார். மாற்றத்திற்கான வாழ்வியல் கல்வி பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் ஐந்து நாள் குழந்தைகளுக்கான கோடைக் கால வாழ்வியல் கல்வி பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியின் மூலம் கிராமத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தை நலன் ஆகியவற்றில் குழந்தை உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்