Advertisment

வேதனையை தந்த உலக சாதனை! தேர்வு நேரத்தில் இது தேவையா ?

student

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பில் 2016 – 2017ல் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தமிழ், ஆங்கில், கணிதப்பாடப்பிரிவில் மாணவ – மாணவிகள் தேசிய சாதனை மதிப்பீட்டில் 28வது இடத்தில் இருந்தது. 2017 – 2018ல் தேசிய சாதனை மதிப்பீட்டில் 14வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. அதை உயர்த்தி முதலிடத்தில் கொண்டு வரும் நோக்கத்தில்தமிழ் எழுத்துக்களை அடையாளம் கண்டுக்கொண்டு, அதன் உச்சரிப்பினை தெளிவாக புரிந்துக்கொண்டு படிக்க வைத்து சாதனை புரிய வைக்க திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2177 அரசு ஆரம்ப பள்ளிகளில் 1.75 லட்சம் மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 2 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகளிடம், தமிழ் செய்தித்தாள்கள், இதழ்கள் வாசிக்க வைக்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.

Advertisment

அதன்படி 19.4.18ந்தேதி காலை 9.30 மணி முதல் 9.50 வரை 470 மையங்களில் மாணவ – மாணவிகளை தமிழ் இதழ்களை வாசிக்க வைத்தனர். வாசித்ததோடு வாசித்த செய்திகளின் தலைப்புகளை உலக செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் என்கிற தலைப்புகளில் எழுதி தந்தனர்.ஒரே நேரத்தில் 1.75 ஆயிரம் மாணவ – மாணவிகள் இதில் வாசிப்பு பயிற்சியில் ஈடுப்பட்டதால் இதனை லிம்கா சாதனை புத்தகம், ஏசியன் சாதனை புத்தகம், இந்திய சாதனை புத்தகம், தமிழக சாதனை புத்தகத்தில் இடம் பெறவைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து அதன் பிரதிநிதிகளை வரவைத்துயிருந்தது.

Advertisment

உலகத்தில் இதற்கு முன்பு 2003ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 72 ஆயிரம் மாணவ – மாணவிகள் புத்தகம் வாசித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளி மாணவ – மாணவிகள் செய்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், சிறப்பு அழைப்பாளராக பத்திரிக்கையாளர் உதயசூரியன் உட்பட பலர் திருவண்ணாமலையில் உள்ள நகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

studen 2

நிகழ்ச்சி பற்றி மாணவிகள் சிலரிடம் பேசியபோது, இன்று 6 ஆம் வகுப்புக்கு ஆங்கில தேர்வும், 7 ஆம் வகுப்புக்கு தமிழும், 8ஆம் வகுப்புக்கு அறிவியல், 9 ஆம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடத்துக்கான ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.தேர்வு நேரத்தில் படிக்கவிடாமல் சாதனை முயற்சி எனச்சொல்லி இரண்டு நாட்களாக எப்படி படிக்கனும், எப்படி எழுதனும், எதை எழுதனும் எனச்சொல்லி டார்ச்சர் செய்துவிட்டார்கள் அண்ணா. படிக்கவேயில்லை, எப்படி தேர்வு எழுதபோகிறோம்னு தெரியல அண்ணா என புலம்பினார்கள்.

இது பற்றி கல்வியாளர்களோ,மாணவ – மாணவிகளை புத்தகம், செய்தித்தாள் வாசிக்க வைப்பது என்பது நல்ல விஷயம் தான். அதிலும் சாதனை செய்கிறேன் என்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதனை எப்போது செய்துயிருக்க வேண்டும் பள்ளிகள் திறந்த கல்வியாண்டு தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ செய்துயிருக்கலாம். அதைவிட்டுவிட்டு தேர்வு நேரத்தில் சாதனை செய்கிறேன் என மாணவ – மாணவிகளை படிக்கவிடாமல் செய்தது சரியல்ல என வேதனைப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி அதிகாரிகளுக்கு வேண்டுமானல் சாதனையாக தெரியலாம், மாணவ – மாணவிகளை பொறுத்தவரை இது வேதனையைத்தான் தந்திருக்கும்.

World Record schools tiruvannamalai Tamilnadu education
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe