Skip to main content

நூறு சதவீத வாக்கை வலியுறுத்தி உலக சாதனை நிகழ்ச்சி... படங்கள்

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

அண்ணாமலைப் பல்கலையில் 100 சதவீத வாக்கை வலியுறுத்தி உலக சாதனை நிகழ்ச்சியில 8,017 மாணவ மாணவிகள் பங்கேற்று சாதனை.

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து வாக்காளர் விழிப்புணர்விற்காக 100 சதவீத வாக்கை உறுதிபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 
 

இந்நிகழ்ச்சியில்  மாணவ மாணவியர்கள் 8017 பேர் பங்கேற்றனர். இதில் VOTE என்ற வடிவில் மாணவ மாணவிகள் நின்று 100 சதவீத வாக்கை வலியுறுத்தியும் நேர்மையான நபரை தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சார் ஆட்சியர் விசுமகாஜன், சிதம்பரம் கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது உலக சாதனை நிகழ்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.

Next Story

மக்களவைத் தேர்தல்; வாக்காளர்களின் எண்ணிக்கையை அறிவித்த தேர்தல் ஆணையம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
The Election Commission declared the number of voters for Lok Sabha elections

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த 6 ஆம் தேதி சென்னை வந்திருந்தனர். அதன்படி தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தை போலவே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடு முழுவதும் 96.88 கோடி பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

அதில், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2.63 கோடி உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள் ஆவர். 17 வயது நிறைவடைந்த உடனேயே பதிவு செய்தவர்கள் 10.64 லட்சம் பேர் ஆவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.