Advertisment

உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்... நேரில் அழைத்து வாழ்த்திய அமைச்சர் ஐ.பெரியசாமி

World record 4 year old boy! Minister I. Periyasamy addressed the gathering

சொடக்கு போடுவதில் சாதனை படைத்த 4 வயது சிறுவனைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வாழ்த்தினார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் சித்தையன்கோட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முகமது சபிக். இவரது மகனான முகமது ஆரிப்(4), தனது இடது கையால் அசத்தலாக சொடக்குப் போடும் திறமை பெற்றுள்ளார். சென்னையில் உள்ள கலாம் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் குமரவேல் சிறுவனின் தனித்திறமையைப் பார்த்து அதை வீடியோ மூலம் தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி கூறி உள்ளார். அதன்படி முகமது ஆரிபின் வீடியோவை பெற்றோர் அனுப்பினர்.

Advertisment

அந்த வீடியோவில் முகமது ஆரிப் ஒரு நிமிடத்தில் இடது கையால் 105 சொடக்கு போட்டுள்ளார். இதைக் கலாம் ரெக்கார்டு நிறுவனம் உலக சாதனையாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து சிறுவனுக்குப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முகமது ஆரிப் பெற்றோர்தங்களதுகுழந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ளஅமைச்சர் ஐ பெரியசாமியை அவரதுஇல்லத்தில் சந்தித்தனர். அப்போது பதக்கத்தையும் பாராட்டுச் சான்றிதழையும் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சாமிநாதன், முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, போக்குவரத்துக் கழக அலுவலகப் பணியாளர்கள், முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார், செயற்குழு உறுப்பினர் நெல்லை சுபாஷ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe