ADVERTISEMENT

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு!

08:11 PM Sep 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இயங்கும் சுற்றுச்சூழல் தகவல் மையம், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து உலக ஓசோன் விழிப்புணர்வு தினம் மற்றும் சர்வதேச கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் தின விழா உயராய்வு மையத்தில் இன்று (18/09/2021) நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் புல முதல்வர் முனைவர் சீனிவாசன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதின் அவசியம் ஆகியவற்றை எடுத்துக்கூறி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர், மாணவர்கள் கடற்கரையில் பகுதியில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்கி கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதின் நோக்கம் குறித்த பிரசுரத்தை வெளியிட்டார்.

விழாவின் சிறப்பு விருந்தினர் இணை பேராசிரியர் ஜான் அடைக்கலம் ஓசோன் படலத்தின் அவசியத்தையும் அதனைப் பாதுகாக்க மாணவர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து உதவி பேராசிரியர் குமரேசன், குளோரோஃப்ளோரோ கார்பன் குறித்து எடுத்துக் கூற, அனைவரும் ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக, பேராசிரியர் அனந்தராமன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக பேராசிரியர் சவுந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

இதனைதொடர்ந்து, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மையமும் இணைந்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்தனர். ஓசோன் தினத்தை நினைவூட்டும் வகையில் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பூஜ்ஜியம் வடிவில் நின்று சுற்றுச்சூழல் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் இணை பேராசிரியர் ராமநாதன், சுற்றுச்சூழல் தகவல் மைய ஊழியர்கள் முனைவர் லெனின், விஜயலட்சுமி, செந்தில்குமார், சுப்பிரமணியன் நாகராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT