உலக செவிலியர் தினம்; மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி

World Nurses Day celebration at  annal gandhi memorial government hospital trichy

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே 12-ஆம் தேதி உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இன்று நாடு முழுவதும் செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஒன்றிணைந்து கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும், அரசு மருத்துவமனையில் தற்போது பணியாற்றி வரக்கூடிய செவிலியர்களில் மூத்த செவிலியர்கள் மற்றும் திறமை அடிப்படையில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு நைட்டிங்கேல் அம்மையாரின் நினைவாக கேடயங்களும் பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மூத்த செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe