Advertisment

உலக மீனவர்கள் தினம்... குடும்பத்துடன் மலர்தூவி கடல் அன்னையை பிரார்த்தித்த மீனவர்கள்!  

Advertisment

மீனவா்களின் வாழ்க்கை என்பது ஒவ்வொரு சூழலிலும்,அச்சத்திலும், ஆபத்திலும் நிறைந்தவையாகும். எதையும் பொருட்படுத்தி கொள்ளாமல் புயல், மழை கடல் சீற்றத்தோடு வாழ்க்கையை வாழ எதிா்நீச்சல் போட்டு கொண்டிருக்கிறாா்கள். ஆனால் கரைகளில் இருக்கும் அந்த மீனவா்களின் குடும்பங்களோ கடலுக்கு போனவா்கள் திரும்ப வரும்வரை கண்ணீரும் கம்பலையுமாக இருப்பதுதான் இன்றைய யதாா்த்த சூழ்நிலை.

இந்தநிலையில் இன்று (20-ம் தேதி) உலக மீனவா்கள் தினம் நாடு முமுவதும் உள்ள கடற்கரை கிராமங்களில் கொண்டாடப்பட்டது. இதில் குமாி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராமங்களிலும் மீனவா் தினம் கொண்டாடப்பட்டது. இதில் குளச்சல் மீனவ கிராமத்தை சோ்ந்த விசைபடகு மீனவா்கள் விசைபடகில் குடும்பத்தினருடன் கடலுக்குள் சென்று விசைப்படகில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினாா்கள்.

பின்னா் அவா்கள் கடலுக்குள் மலா்கள் தூவி கடல் அன்னைக்கு மாியாதை செலுத்தி புயல் தாக்குதல் மற்றும் விபத்தில் இருந்து மீனவா்களை காப்பாற்ற வேண்டும் எனவணங்கினாா்கள். தொடா்ந்து தெற்காசிய மீனவா் தோழமை பொதுச்செயலாளா் பாதிாியா் சா்ச்சில் மீனவா்களின் விசைபடகு, நாட்டு படகு, கட்டுமரம், வலைகள் மற்றும் தூண்டில்களுக்கு அா்ச்சிப்பு செய்தாா்.

Advertisment

தொடா்ந்து அவா் கூறும் போது... ஆண்டுத்தோறும் கொண்டாடப்படும் உலக மீனவா் தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று பல ஆண்டுகளாக அரசை வலியறுத்தி கேட்டு வருகிறோம். அரசுக்கு ஆண்டிற்கு 60 ஆயிரம் கோடி அந்நிய செலவாணியை மீனவா்கள்தான் ஈட்டி கொடுக்கிறாா்கள்.

மீனவா்கள் ஆழ்கடலில் 7 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை தங்கி மீன் பிடிக்கிறாா்கள். அந்த மீனவா்கள் நோய்வாய்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் காயம் அடைந்தாலோ அவா்களை கரையில் மருத்துவமனைக்கு கொண்டு சோ்க்க இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. இதனால் அவா்களை உடனடியாக மீட்க ஹெலிகாப்டா் தளம், ஹெலிகாப்டா் மற்றும் வான்வெளி ஆம்புலன்ஸ்க்கு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை கேட்டு வருகிறோம்.

மேலும் இரண்டு ஆண்டுக்கு சுமாா் 25 மீனவா்கள் கடலில் மாயமாகிறாா்கள் இறந்தும் போகிறாா்கள். இது மீனவா்கள் மத்தியில் பெரும் கவலையாக உள்ளது. இதை தடுக்கும் விதமாக ஆழ்கடல் செல்லும் விசைபடகுகளுக்கு சேட்டிலைட் போன் மற்றும் ரோடியோ டெலிபோன் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு கரையில் சக்தி வாய்ந்த தொலைத்தொடா்பு வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

boats fisherman Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe