Advertisment

உலக மீனவர் தினம்... குமரிக் கடலுக்கு மரியாதை செய்த மீனவர்கள்...!

World Fishermen's Day ... Fishermen who paid homage to the sea in KanyaKumari ...!

Advertisment

நவம்பர் 21, இன்று நாடு முழுவதும் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குமரி மாவட்டத்தில் தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் குமரி கடற்கரைகளில் மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பாதிரியார்களும் மீனவர்களும் கடற்கரையில் நின்று கடலுக்கும், கடல் வாழ் மீன்களுக்கும், மீன் பிடி கருவிகளுக்கும் பிரார்த்தனை செய்தனர். பின்னர், கடலுக்கு மலர் தூவி மரியாதை செய்ததோடு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இதைத் தொடர்ந்து கடற்கரை மணலில் பெண்கள் மீன் சுமந்து ஓடுதல், வடம் இழுத்தல், மற்றும் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகளை நடத்தினார்கள். தொடர்ந்து மத்திய அரசிடம் 60 ஆயிரம் கோடி அந்நிய செலவாணியைப் பெற்றுத்தரும் மீனவர்களுக்காக மத்தியில் மீன்வளத்துறை தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தேசிய மீன்வள கொள்கை 2020ஐ கைவிட வேண்டும். மண்டல கமிஷன் பரிந்துரைப்படி மீனவர்களையும் பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும்.

மேலும், ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களையும்மாயமாகும் மீனவர்களையும்காப்பாற்றுவதற்காக குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். அதேபோல் கடல் ஆம்புலன்சும் அமைக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe