உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் கோயில் வளாகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, அரண்மனை தேவஸ்தான அறங்காவலர், விழா குழு தலைவர் ஆகியோர் நேரில் சந்தித்து தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினர்.