Skip to main content

உலக புகழ் வாய்ந்த குலசை முத்தாரம்மன் ஆலய தசரா விழா தொடங்கியது!

உலக புகழ் பெற்ற கர்நாடகாவின் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலய தசரா விழாவிற்குச் சமமானது தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் பக்கமுள்ள குலசை என்றழைக்கப்படும் குலசேகரப்பட்டின முத்தாரம்மன் ஆலய தசரா விழா.
 

முற்காலத்தில் கொள்கை பாண்டிய மன்னரால் அமைக்கப்பட்ட குலசை, கடற்கரைப் பிரதேசம் மன்னர் இதனைத் துறைமுகமாக்கினார். அங்கிருந்தே தென்பாண்டி மண்டல வணிகர்கள் தங்களின் வணிகக் கப்பல்களில் மூலம் வெளிநாடுகளுக்கான சரக்குகளுடன் வியாபாரம் நோக்கில் செல்வதுண்டு. அதே போன்று இங்கு தேவையான பண்டங்களைக் வெளி நாட்டு வணிகர்கள் கப்பல் மூலம் கொண்டு வருவார்கள். பண்டமாற்று வணிகம் இங்கே சிறப்பாக நடந்ததாக வரலாற்றுச் செப்பேடுகள் கூறுகின்றனர். 

 The world famous bunch   Mutharamman Temple Dasara Festival started!


அப்படி கடல் வழி வணிகம் செய்கிற வணிகர்கள் துறைமுகக் கரையில் அமைந்திருக்கும் ஞான மூர்த்தீஸ்வர முத்தாரம்மன் சமேத ஆலய தெய்வத்தை வணங்கி வழிபட்டுச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே கடலில் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் எவ்வித இடையூறுமின்றி சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 
 

வணிகச் செழிப்பு பாளையம் வளம் காரணமாக குலசையின் முத்தாரம்மனின் வழிபாடு ஆலயக்கொடி ஏற்றப்பட்டு 10 நாட்கள் விழாவாக நவராத்திரி தொடங்கி தசரா தினம் வரை கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. காலப்போக்கில் ஆலயத்தின் மகிமை பரவியதன், அடிப்படையில் பக்தர்களின் கூட்டம் வெளியிடங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் திரண்டு வர ஆரம்பித்திருக்கிறது. நவராத்திரி தசரா புருவங்கள் உயரும் வகையில் விஷேசமாக நடந்திருக்கிறது.
 

குலசை ஆலயத்தில் சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. பிற ஆலயங்களில் சிவபெருமான், பார்வதி அம்பாள் தனித்தனியாக அமர்ந்திருப்பர். ஆனால் அதிசயமாக இங்கே சுவாமியும், அம்பாளும், ஒரே கோலத்தில் காட்சியளிக்கும்படி அமைந்திருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.

 

 The world famous bunch   Mutharamman Temple Dasara Festival started!

இப்படிபட்ட குலசைத் தசரா விழாவின் தொடக்கம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் இங்கு வந்து தரிசித்து விட்டு காப்புக்கட்டி விரத மேற்கொள்கிறார்கள். பலர் அவரவர் தன்மைக்கேற்ப பல நாட்கள் விரத மேற்கொள்வர். நவராத்திரி தசரா தினம் வரை பக்தர்கள் தங்களின் நேர்ச்சைக்காக காளி, பத்ரகாளி, வேடன் வேடத்தி சுவாமி, அம்பாள் என்று பல வேடங்களைப் போட்டுக் கொள்வர். 


இதற்காகவே மாவட்டங்களின் ஒவ்வொரு கிராமத்திலும் தசரா குழு என்று குழுக்களாகவே செயல்படுகிறது. விரத நாட்களில் தங்களின் வீடுகளில் தங்காமல், குழுவாகத் தனிப்படை வீடு அமைத்து தங்குபவர்கள் நவராத்திரி தசரா அன்று தங்களின் விரதத்தைக் கடலில் நீராடி முத்தாரம்மனை வழிபட்ட பின்பு முடிப்பார்கள். அன்றையதினம் இரவு கடற்கரையில் சூரசம்ஹார வதம் நடக்கும் இதைக் காண்பதற்காகவே பல லட்சம் மக்கள் கடற்கரையில் திரளுவதுண்டு. நவராத்திரி தினம் வரை விழா அமர்க்களப்படும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்