Skip to main content

சேலம்: நகருக்குள் வனம் திட்டம் விரிவாக்கம்! 

Published on 07/06/2020 | Edited on 07/06/2020

 

World Environment Day salem district corporation commissioner


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலத்தில் மேலும் கூடுதலாக இரண்டு இடங்களில் நகருக்குள் வனம் அமைக்கும் பணிகளை, வெள்ளியன்று (ஜூன் 5) மாநகராட்சி ஆணையர் சதீஸ் தொடங்கி வைத்தார்.


சேலம் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், பயன்படுத்தப்படாத காலி இடங்களில் மரங்களை வளர்க்கும் வகையில், நகருக்குள் வனம் என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு சேலம் சீலநாயக்கன்பட்டி, தாதம்பட்டி ஆட்டோ நகர், வாய்க்கால்பட்டறை, காக்காயன்காடு, சூரமங்கலம் அருகே போடிநாயக்கன்பட்டி ஏரிக்கரை ஆகிய இடங்களில் மொத்தம் 4200 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

அதையடுத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து நிலை அலுவலக வளாகங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பூங்காக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகங்கள், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு வளாகங்கள், 5 நகர் வனங்கள் உள்ளிட்ட இடங்களில் 10120 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அரசுப் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கும் 15750 மரக்கன்றுகளை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. 

 

World Environment Day salem district corporation commissioner


இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஜூன் 5- ஆம் தேதி, சீலநாயக்கன்பட்டி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு வளாகம், தாதம்பட்டி ஆட்டோ நகர் ஆகிய இரு இடங்களிலும் கூடுதலாக நகருக்குள் வனம் அமைக்கும் பணிகளை ஆணையர் துவக்கி வைத்தார். மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 7 நகருக்குள் வனங்களில், வேம்பு, புங்கன், வேங்கை, மருதம், நாவல், நெல்லி, கொய்யா, மாதுளை, சிசு, மலைவேம்பு, பூவரசு உள்ளிட்ட 25 வகையான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 


காற்றில் உள்ள கார்பன்- டை ஆக்சைடு வாயு அதிகளவில் உறிஞ்சப்பட்டு, ஆக்ஸிஜன் வாயு கிடைக்கவும், மழைநீரை சேமிக்கவும் நகருக்குள் வனம் திட்டம் உதவும். காற்றில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கப்படும். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தன்னார்வலர்கள், குடியிருப்பு சங்கங்கள், பொதுமக்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் தங்களுடைய வளாகப் பகுதிளில் மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும் என்று ஆணையர் சதீஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Warrant to Tirunelveli Corporation Commissioner

 

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ரத்தினம் என்பவர் புதிய குடிநீர் இணைப்புக்கு 2 முறை திருநெல்வேலி மாநகராட்சிக்கு பணம் செலுத்தியுள்ளார். இரண்டு முறை புதிய குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நெல்லை மாநகராட்சி ஆணையர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையருக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மனுதாரர் கூடுதலாக செலுத்திய 6 ஆயிரத்து 500 ரூபாயும், மன உளைச்சலுக்காக 15 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தது.

 

பல மாதங்களாகியும் மனுதாருக்கு உரிய இழப்பீட்டு தொகையை திருநெல்வேலி மாநகராட்சி  ஒப்படைக்கவில்லை. இதனால் மனுதாரர் ரத்தினம் மீண்டும் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

 

 

 

 

Next Story

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

dindigul corporation commissioner home search

 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் காஞ்சிபுரத்தில் இருந்து  பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது கொரோனா காலகட்டத்தில் கிருமிநாசினி  கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.