இன்று (03.12.2021) உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளைப் போற்றும் விதமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு முன்னிலை வகித்தார். அதேபோல், தயாநிதி மாறன் எம்.பி, ராதாகிருஷ்ணன், நாராயண பாபு, மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.