Skip to main content

உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சென்னை வருகை! 

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

World chess champion Magnus Carlsen visits Chennai!

 

உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சென்னை வந்தடைந்தார். 

 

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கிய நிலையில், கடந்த ஏழு நாட்களாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான செஸ் வீரர்கள், சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், நேற்றிரவு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சென்னைக்கு வருகை தந்தார். 

 

அவரை வரவேற்று அதிகாரிகள் மலர்க்கொத்து அளித்தனர். அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக, விமான நிலையத்தில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேக்னஸ் கார்ல்சன், "இந்தியாவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நான் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வெற்றி பெறுவதற்கு முழு முயற்சியையும் செலுத்துவேன்" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் 'தம்பி குதிரை' சிலை

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 Statue of 'Brother Horse' awaiting unveiling

தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வருகிற 19ம் தேதி (நாளை ) முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நாளை மறுதினம் மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் நாளை சென்னை வருகிறார். பின்னர் மாலை 5:45 மணி அளவில் கேலோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டி தொடக்க விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்த தம்பி குதிரையினுடைய சின்னம் சிலையாக அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நாளை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலை சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்கான சிலை என கீழே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. நாளை நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

சென்னையில் கடும் புகைமூட்டம்; 50 விமான சேவை பாதிப்பு

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
50 flight services affected in Chennai due to heavy smog
கோப்புப்படம்

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. 

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும்.  அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது. 

சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் அது மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் கடும் புகை மூட்டம் காரணமாகச் சென்னையில் 50 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத், மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 21 விமானங்கள் புறப்படுவதிலும், 21 விமானங்கள் சென்னைக்கு வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புகை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் தரையிறங்கவிருந்த சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமானங்கள் புகை மூட்டம் காரணமாக ஐதராபாத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது.