Advertisment

உலக முதியோர் தினமான இன்று (01.10.2021) சென்னையில் ‘மனிதம் போற்று’ எனும் அமைப்பு சார்பாக ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்டங்களை செய்தனர். மனிதம் போற்று எனும் அமைப்பின் இளைஞர்கள், உலக முதியோர் தினமான இன்று மெரினாவில் ஆதரவற்ற முதியோர்களுக்குத் தலைமுடிகளை சீர்செய்தும், அவர்களுக்குப் புத்தாடைகள், உணவுகள் ஆகியவற்றையும் வழங்கினர்.