“Working towards a permanent solution” - Minister KN Nehru

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

Advertisment

மழைநீர் தேங்குவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதன் விளைவுகளைப் பற்றியும் அமைச்சர்கள், தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்த இடங்களில் நேரடி ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இன்று மண்ணடி பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை தண்ணீர் இருந்த அனைத்து இடங்களிலும் 90% தண்ணீர் வடிந்துவிட்டது. தொடர்ந்து 40 இடங்களில் பார்வையிடப் போகிறோம். எங்கெல்லாம் பணிகள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தொடர்ச்சியாக பார்வையிட்டு முழுமையானதீர்வு காண முயற்சிக்கிறோம்.

நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்க்கின்றனர். நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை மற்றும் ரயில்வேதுறைகள் இணைந்து செயல்படுகிறோம். ரயில்வேதுறையும் எங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.

சென்னையில் இருக்கும் ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இன்று காலை கூட அறநிலையத்துறை அமைச்சர் சென்று உணவு வழங்கிவிட்டுத்தான் வந்திருக்கிறார். எதிர்பாராத இடங்களில் ஏதாவது தவறு நடந்தாலும் அதையும் உடனடியாக சரி செய்கிறோம்” எனக் கூறினார்.