Workers who married girls and misbehave them

ஈரோடு மாவட்டம் 46 புதூர், பச்சப்பாளியைச் சேர்ந்த தினேஷ்(24). கூலி தொழிலாளியான இவர் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் குழந்தை திருமண தடை சட்ட பிரிவு மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் தினேஷ் மீது மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானி, தளவாய்பேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல்(24). கூலித் தொழிலாளியான இவர் பவானியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி அவரைக் கடத்தி திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி சக்திவேல் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.