Advertisment

“லாபத்தைவிட  தொழிலாளர்களின் உயிர்கள் முக்கியம்..” தொழிற்சாலைகளை மூட ராமதாஸ் வலியுறுத்தல்

publive-image

Advertisment

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் பெரிய அளவில் உள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன்களைப் பெறுவது, மருத்துவமனைகளில் படுக்கைகளைக் கூடுதலாக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேவேளையில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. ஆனால், இந்த முழு ஊரடங்கிலும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கிவருகிறது. அதன் மூலம், கரோனா பரவல் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதனால், அத்தியாவசிய தொழிற்சாலைகளைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் அத்தியாவசியமற்ற பல பெரிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணியாற்றும் ஆலைகள் தொடர்ந்து இயங்குவதால், அந்த ஆலைகளில் கரோனா வேகமாக பரவுகிறது; அவை மூடப்பட வேண்டும்.

மின்னுற்பத்தி நிலையங்கள், உணவுப்பொருள் தயாரிப்பு ஆலைகள் போன்றவையே அத்தியாவசியப் பொருள் தயாரிப்பு ஆலைகள்.மகிழுந்து ஆலைகள், கண்ணாடி ஆலைகள், உதிரிபாக ஆலைகள் போன்றவை இயங்க வேண்டிய தேவை என்ன? நிறுவனங்களின் லாபத்தைவிட தொழிலாளர்களின் உயிர்கள் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

Ramadoss pmk corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe