Skip to main content

இந்தியாவில் 10 லட்சம் பாலியல் தொழிலாளர் ஏன் தெரியுமா? திருச்சியில் பரபரப்பு பேட்டி

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

 

இந்தியாவில் பாலியல் தொழில் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 10 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என திருச்சி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார் சியாப் (தென்னிந்திய எய்ட்ஸ் செயல்பாட்டு திட்டம்) அமைப்பின் நிறுவன திட்ட அலுவலர் ஜனனி.


 

vadamalar


 

 

இதுகுறித்து அவர் பேசுகையில், ''இந்தியாவில் பாலியல் தொழில் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 10 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். பாலியில் தொழில் சட்டவிரோதமான தொழில் அல்ல, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள குழு, சுய விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்வது குற்றம் ஆகாது என குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 10 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.
 

இவர்களில் தமிழகம், ஆந்திரா, மற்றும் புனே நகரில் வசிக்கும் 1000 பேரிடம் ஆய்வு செய்ததில் பாலியல் தொழிலில் ஈடுபடுவர்களில் 62 சதவீதம் பேர் திருமணம் ஆன பெண்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த தொழில் செய்வதாக தெரிவித்தனர்.


 

அதிக வருமானம், குறைந்த நேரம், நினைத்த நேரத்தில் பணி ஆகிய வசதிகள் இருப்பதால் இந்த தொழிலை விரும்புவதாக தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் குடும்பத்திற்கு தெரியாமலே இந்த தொழிலை செய்கிறார்கள். போலிசார் கைது செய்த பின்பு ஊடகங்களில் செய்தி வெளியான பின்பு தான் குடும்பத்தினருக்கு தெரிகிறது. இதன் பிறகு அந்த பெண்கள், அவர்கள் குடும்பத்தினர், அந்த பகுதி மக்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
 

பொது இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் சுயவிருப்பத்தின் பெயரில் யாருடைய கட்டாயத்திற்கும் ஆளாகாமல் பாலியல் தொழில் பெண் ஈடுப்பட்டால் இது குற்றம் இல்லை என்று சட்டம் சொல்கிறது. பாலியல் தொழிலாளர்களை பிடித்து மறுவாழ்வு தருகிறேன் என்று சொல்லி அவர்களை இல்லங்களில் அடைத்து வைக்க கூடாது'' என்றார்.
 

இதே போல் வாடாமலர் எய்ட்ஸ் தடுப்பு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவி கோகிலா பேசும்போது, வாடகை வீடு எடுத்தோ, ''விடுதியில் வணிக நோக்கில் அதிக பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நாங்கள் குறையாக சொல்லவில்லை. அதே நேரம் பிழைப்புக்காக விருப்பத்தின் பெயரில் வாடிக்கையாளர்களை வரவழைத்து ஈடுபடுவோரை கைது செய்ய கூடாது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி; சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Employee passed away in Cuddalore electrocution

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாராயணசாமி(40). இவர் ஊத்தாங்கால் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பொன்னாலகரத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கம் செய்வதற்காக 12.30 மணியளவில் மின்வாரிய ஊழியர்கள் நாராயணசாமியை அழைத்துச் சென்றுள்ளனர். மின்மாற்றியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி நாராயணசாமி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத்  தெரிவித்தனர். இதையடுத்து நாராயணசாமி உறவினர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, விருத்தாசலம் - கடலூர் சாலையில், நேற்று ஊத்தாங்கால் மின்வாரிய அலுவலகம் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஊ.மங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியலை கைவிட்டு மின்வாரிய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் விருத்தாசலம் வட்டாட்சியர் ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாகுல் ஹமீது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைய மாட்டோம் என மீண்டும் விருத்தாசலம்- கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் லூர்து சாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இழப்பீடு கிடைக்கவும், உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

 

Next Story

நடுநிசி நேரத்தில் கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

  worker was injured in a wild cow attack near Dindigul

 

நடுநிசி நேரத்தில் தனியாக நடந்து சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர சம்பவம், கொடைக்கானல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு அருகே உள்ளது பேத்துப்பாறை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கூலித் தொழிலாளியான இவர், அங்குள்ள காபி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு நேரத்தில், கண்ணன் வழக்கம்போல் தனது வேலையை முடித்துக்கொண்டு கையில் காபி மூட்டையுடன் நடந்தே வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, அந்த இரவு நேரத்தில் தனியாக வந்துகொண்டிருந்த கண்ணனுக்கு, அவருக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பதற்றமடைந்த கண்ணன், பொறுமையாக பின்னால் திரும்பி பார்க்கும் நேரத்தில், அங்கு மறைந்திருந்த காட்டு மாடு ஒன்று திடீரென எதிர்பார்க்காத வேளையில், கண்ணனை கொடூரமாகத் தாக்கியுள்ளது.

 

மேலும், இதில் படுகாயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து, பலத்த காயங்களுடன் பரிதவித்துக் கொண்டிருந்த கண்ணன், உதவிக்கு யாராவது வருவார்களா? எனக் கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த சமயம், புனித அக்யூனாஸ் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகளான பாக்யராஜ், உதயகுமார், ஜோசப் உள்ளிட்ட சிலர் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கண்ணனின் அலறல் சத்தம் கேட்ட அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

 

அங்கே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கண்ணனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகிகள், அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து காட்டு மாடுகளால் தாக்கப்பட்ட கண்ணன், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், வன விலங்கால் தாக்கப்பட்ட கூலித் தொழிலாளி ஒருவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய புனித அக்யூனாஸ் பள்ளி நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.