சென்னை, சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகைவரை அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.மத்திய அரசு, சமீபத்தில் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து அதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், நீதி கோரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரணி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment