/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_169.jpg)
புதுக்கோட்டை கரம்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்(22). இவர் முசிறியில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 45 நாட்களாக பணியாற்றி வருகிறார். ஊர் விட்டு ஊர் வந்திருக்கும் அய்யப்பன், அந்த பேக்கரியின் மேலே உள்ள தங்கும் அறையில் தங்கி கொண்டு பணியாற்றி வருகிறார். இதனிடையே அவருக்கு கடந்த 4 நாட்களாக அம்மை போட்டுள்ளதால், அறையை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். கடந்த 9ஆம் தேதி இரவு 9 மணியளவில் கடையின் உரிமையாளர் இலக்கியன் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கி உள்ளார். இதுக்குறித்து அவர் முசிறி காவல்நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)