சிதம்பரம் அருகே பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி முகுந்தன்,அவர் அறுவடை செய்த சுமார் 450 நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலம் பகுதியில் இயங்கி வரும் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றபோது அவரிடம் நெல் கொள்முதல் செய்யத்தலைமை சுமை தூக்கும் தொழிலாளர் தியாகராஜன் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இவரைப் பட்டியல் எழுத்தர் ரகுமான் லஞ்சம் வாங்கச் சொன்னாரா? இல்லை எதற்காகத்தலைமை சுமை தூக்கும் தொழிலாளர் லஞ்சம் பெற்றார் என்ற கோணத்தில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான காவல்துறையினர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகத்திற்குத்தலைமை சுமை தூக்கும் தொழிலாளர் தியாகராஜனைஅழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் உள்ளிட்டவற்றைஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.