Worker passed away due electrocution during repair work on power pole

கரூரில் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு - போலீசார் விசாரணை.

Advertisment

கரூர் அடுத்த பசுபதி பாளையம் அருணாசலம் நகர்ப் பகுதியில் மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ரமேஷ் கண்ணன் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணிக்காக ஏறிய போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உள்ளார்.

Advertisment

மின்கம்பத்தில் செல்லக்கூடிய இரண்டு லைன்களில் ஒரு லைனை ஆஃப் செய்யாமல் ஏறிய போது மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிணவறையில் வைத்து விட்டு பசுபதி பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷ் கண்ணன் கடந்த 10 ஆண்டுகளாக மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.