
ஈரோடு கல்குவாரியில் அழுகிய நிலையில் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலை வாழைத்தோட்டவலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவரது மனைவி பேபி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தங்கராஜ் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடியை நிறுத்த முடியாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சித்தோட்டில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சென்று சிகிச்சை பெற்று அதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் முத்தூரில் லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்று வருவதாகக் கூறி தங்கராஜ் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கொல்லன்வலசு பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் கழிவு கற்கள் கொட்டப்படும் இடத்தில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)