Advertisment

தொழிலாளி கடத்தல் வழக்கு; நீதிமன்றத்தில் சரணடைந்த இருவர்! 

Worker abduction case; Two who surrendered in court!

Advertisment

சென்னையைச் சேர்ந்த தாமஸ் பாக்கிராஜ் என்ற தொழிலதிபர் திருச்சி - கல்லணை சாலையில் 4 ஏக்கர் பரப்பளவில் பண்ணை ஒன்றை வைத்துள்ளார். அநத் பண்ணையை முழுமையாக ஜோசப் வல்லவராஜ் என்பார் பராமரித்துவந்தார். இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அவர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர், அவரை தேடிவந்தனர். இந்நிலையில், ஜோசப் வல்லவராஜை கடத்திய கும்பல் அவரை ஒரு காரில் வைத்து திருச்சி முழுக்க சுற்றிவந்துள்ளது. கடத்தல் புகாரை எடுத்த காவல்துறையினர் உடனடியாக திருச்சி முழுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீரங்கம் அருகே ஒரு காரை மடக்கி பிடித்தனர். அதில் கடத்தப்பட்ட ஜோசப் வல்லவராஜ் இருந்தார். காவல்துறையைக் கண்ட கடத்தல் கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமான தேடலில் ஜோசப் வல்லவராஜைகடத்திய கவின்குமார், அருண்குமார், சசிகுமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு துறையூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம், இந்த வழக்கி்ல் தொடர்புடைய மேலும் இருவரான ஆகாஷ், ராகவன் ஆகிய இரண்டு பேர் திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி திரிவேணி முன்பு சரண் அடைந்தனர். அதையடுத்து அவர்கள் இருவரும் துறையூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe