/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/singapore4343.jpg)
போலி கடவுச்சீட்டு மூலமாக சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் வேலை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர், வடக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது 43). இவர்சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வருவதாகவும்அதற்கான கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) புதுப்பித்து தரும்படியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழககடவுச்சீட்டு வழங்கல் அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய தணிக்கை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்,வீரகனூர் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் வீரகனூர் எஸ்.ஐ. தினேஷ்குமார் வீரமுத்துவின் வீட்டிற்குச் சென்று தணிக்கை செய்துள்ளார். அப்போது வீரமுத்து சிங்கப்பூரில் வேலை செய்யவில்லை என்பதும்அவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.வீரமுத்துவின் பெயரில் அவருடைய உறவினரான உள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பவர் போலியாகக் கடவுச்சீட்டு எடுத்துசிங்கப்பூரில் வாகன ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரிய வந்தது.
ஆள்மாறாட்டம் செய்து போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் எஸ்.ஐ. தினேஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன்போலி கடவுச்சீட்டு, போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தார்.
ராஜேஷ் எப்போது தமிழகம் திரும்பினாலும் அவரைக் கைது செய்ய காத்திருந்த காவல்துறையினர்சென்னை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும் தேடுதல் அறிவிக்கை (லுக் அவுட்) வழங்கி இருந்தனர்.காவல்துறையினர் வலை விரித்துக் காத்திருப்பதை அறியாத ராஜேஷ், நவ. 13 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரைகுடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில்சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் காவலர்கள் குழு திருச்சி சென்று ராஜேஷை கைது செய்தனர். அவரை சேலம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு,வடக்கு ராமநாதபுரத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த உறவினரான வீரமுத்துவின் ரேஷன் கார்டு, பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை திருடிய ராஜேஷ்அதன்மூலமாக போலி கடவுச்சீட்டு பெற்றுள்ளார். அப்போது ராஜேஷுக்கு 18 வயது நிறைவடையாததால் வீரமுத்துவின் பெயரிலேயே போலியாக கடவுச்சீட்டு பெற்று சிங்கப்பூருக்கு பறந்துள்ளார். இதன்மூலம் அவர் 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அவருடைய கடவுச்சீட்டின் ஆயுட்காலம் காலாவதி ஆகிவிட்டது. அதைப் புதுப்பிக்க முயன்ற போதுதான் காவல்துறையில் வசமாக சிக்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.கைதான ராஜேஷை சேலம் மாவட்ட 6-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவரின் உத்தரவின்பேரில் ராஜேஷை சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)