ADVERTISEMENT

“அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 இடங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது..” - அமைச்சர் கே.என். நேரு 

01:23 PM May 19, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்துவருவதால், நோய்த் தொற்றால் பாதிக்கபடுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது.

இந்நிலையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனின் அளவு, படுக்கைகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கான சிகிச்சைமுறை, நோயாளிகளின் எண்ணிக்கை என பல்வேறு தகவல்கள் குறித்து திருச்சி தலைமை அரசு மருத்துவமனை தலைவர் மருத்துவர் வனிதாவிடம் நேரில் விசாரணை செய்துள்ளார்.

உடனடித் தேவை எது என்பதை ஆராய்ந்து தகவல் கொடுக்குமாறும், அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “834 பேர் உள்நோயாளிகளாக தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், கலையரங்கம் மண்டபத்தில் ஆக்ஸிஜன் வசதியோடு கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 இடங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.

திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் வசதி செய்து தரப்படும். தற்போதைக்கு ஆக்ஸிஜனுக்கு எந்தவித தட்டுபாடும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்திரபாண்டியன், இனிகோ இருதயராஜ், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT