NN

திண்டுக்கல் ரவுண்டு ரோடு நாயுடு திருமண மண்டபத்தில் திண்டுக்கல் கிழக்கு - மேற்கு, தேனி வடக்கு - தெற்கு மாவட்டம் சார்பாக 2026 சட்டமன்ற தேர்தலின் போது திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து (டி.எல்.சி, சி.எல். சி. எஃ.எல்.சி, டி.எல்.சி) நிர்வாகிகளுக் கான ஆலோசனை கூட்டம் திண்டுக் கல் ரவுண்டு ரோடு நாயுடு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிதலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி. செந்தில்குமார், தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தங்கதமிழ்ச்செல்வன், கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும், மாநில சட்டத்துறை செயலாளருமான என்.ஆர். இளங்கோ கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு தேர்தலின் போது செயல்படுத்த வேண்டிய தேர்தல் விதி முறைகளை குறித்து எடுத்துரைத்தார்.

 work tirelessly to win in all 11 constituencies in Dindigul-Theni district

Advertisment

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, தேனி மாவட்டத்தை பொறுத்த வரை நாம் 75 சதவீதம் வெற்றி பெற்று தேனி மாவட்டத்தை தக்க வைத்துள்ளோம். இனி 25 சதவீதம் தான் வெற்றி பெற வேண்டியுள்ளது. இதுபோல திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். இனி 40 சதவீதம் தான் உள்ளது. அதற்கான பணிகளை நாம் செய்தால் 100 சதவீதம் வெற்றி பெற முடியும் என்ற தோடு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற திமுக நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு திமுக சட்டத்துறை உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான காந்திராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைதலைவர் வழக்கறிஞர் காமாட்சி; துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மார்கி ரேட்மேரி மற்றும் தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், வழக்கறிஞர் அணியை சேர்ந்த நிர்வாகி கள் உட்பட கலந்து கொண்டனர்.