போலி சாதிச்சான்று கொடுத்து வேலை; 40 வருடங்களுக்குப் பின் சிக்கியவரின் வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Work by giving fake caste certificate; High Court important order in the case of the person trapped after 40 years

அரசு வேலைக்காகப் போலி சாதிச்சான்று அளித்து இட ஒதுக்கீடு கொள்கையைச் சுரண்டுவோரைத்தண்டிக்காமல் விட முடியாது எனஉயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கோவை வன மரபியல் நிறுவனத்தில் பதவி உயர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பாலசுந்தரம் என்பவரது பழங்குடியின சான்றிதழை கோவை வன மரபியல் நிறுவனம் ரத்து செய்தது. 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தனது சாதிச்சான்றை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்தது சட்டப்பூர்வமானது அல்ல என பாலசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பாலசுந்தரத்தின் சாதிச்சான்றை ரத்து செய்த நடவடிக்கையை உறுதி செய்தது. நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வு போலிச் சான்றிதழ் ரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பித்தது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது பெருமைக்குரிய ஒன்று. அரசு வேலைக்காகப் போலி சாதிச்சான்று அளித்து இட ஒதுக்கீடு கொள்கையைச் சுரண்டுவோரைத்தண்டிக்காமல் விட முடியாது என்றும் கூறியுள்ளது.

highcourt
இதையும் படியுங்கள்
Subscribe