Advertisment

வெளிநாட்டில் வேலை: லட்சங்களை விழுங்கிய மோசடி சகோதரர்கள்..!  

Work abroad; Fraudulent brothers who swallowed lakhs ..!

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்த உதயசங்கரும், பிரதீப்சங்கரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் என நடத்தி துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.

Advertisment

இதை நம்பி இளைஞர்கள் பலர், லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருக்கின்றனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட சகோதரர்கள் அவர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஸ்ரீஜித் (23) என்பவர் அங்குள்ள மாலா போலீஸ் நிலையத்தில் தன்னிடம் ரூ. 4 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஏமாற்றிவிட்டதாக சகோதரர்கள் மீது புகார் அளித்தார்.

Advertisment

இந்தப் புகாரின் பேரில் கேரள போலீசார் நேற்று (02.07.2021) கோவை வந்து, உதய்சங்கர், பிரதீப்சங்கர் ஆகிய இருவரையும் கைதுசெய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe