Advertisment

டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறு; மரக்கடை அதிபர் அடித்துக் கொலை

Wood shop owner beaten to incident in dispute at Tasmac Bar

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலைச் சேர்ந்தவர் பாலுசாமி (61). இவர் அதே பகுதியில் சொந்தமாக மரக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கொளப்பலூர் அருகே உள்ள காமராஜர் நகரில்டாஸ்மாக் பாருக்கு நேற்று இரவுசென்றார். அதே டாஸ்மாக் பாரில் தங்கமலை கரடு பகுதியைச் சேர்ந்த 2 பேர் மது குடிக்க வந்தனர். அப்போது பாலுசாமிக்கும், அவர்கள் இருவர் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் பாலுசாமியை தாக்கிவிட்டுஅங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால்பாலுசாமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள்பாலுசாமியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாலுசாமி சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பாலுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Advertisment

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுசாமியை மது பாட்டிலால் அடித்து கொலை செய்த இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் மரக்கடை அதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe