சமூகவலைதளத்தில் பார்வையற்ற இளைஞரின்அசாத்திய பாடல் திறமையை வெளிப்படுத்திய வீடியோவை பார்த்த பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அந்த இளைஞருக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தருவதாக கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அண்மையில் அவர் தாய்மை பற்றி அவர் பாடியபாடல் காட்சிஒன்றை அவரது நண்பர்கள் முகநூலில்பதிவிட்டு இருந்தனர். அதனையடுத்து விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ''கண்ணான கண்ணே'' என்ற திரைப் பாடலையும் திருமூர்த்தி பாடி அதை அவரது நண்பர்கள் முகநூலில் பதிவிட்டிருந்தனர்.
அந்த காணொளி இசையமைப்பாளர் டி.இமானின்பார்வையில் பட்டதை அடுத்து மாற்றுத்திறனாளி இளைஞரானதிருமூர்த்திக்கு பாட வாய்ப்பு தருவதாக இசையமைப்பாளர் டி.இமான் அறிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.